இயல்பாய் எனக்குள்
ஊற்றெடுத்த மூச்சு,
இயங்குகிறேன் என்பதன்
அடையாளமாய் இதயத்துடிப்பு,
வர்ண ஜாலங்களாய்
நினைவலைகள்,
மூளையின் முனைப்பில்,
முத்தாய்ப்பாய் உணர்வதிர்வுகள்,
மனதின் ஆழத்தில் எங்கேயோ..
மத்தாப்பாய் மகிழ்ச்சி சிதறல்கள்
உதடுகளின் உள்ளார்ந்த.....
பிரவாகமாய் புன்னகை..
அனைத்தும் சுதந்திரமாய்....
அளித்தான் ஆண்டவன்,.....
வரையறையின்றி...
சுவைக்கிறேன்..சுகமாய்...
ஏன்???....
வாழ்வு மட்டும் விரோதமாய்....
விருப்புடன்...வாழ்வோம்.....
விடுதலையாய் பரிணமிப்போம்..
கவிஞருக்கு வாழ்த்துக்கள்...எண்ணங்கள் அனைத்தும் ஈடேற்றம் காணட்டும்....
ReplyDelete