Skip to main content

Posts

Showing posts from February, 2020

சிலுவை

சீரேனே ஊரானாகிய சீமோன் இறைமகன் சிலுவையை, சிறிதுநேரம் சுமந்த தால், இயேசுவின் சுமை, சற்று தணிந்ததோ??? தெரியவில்லை; ஆயினும், யேசுவின் சிலுவைக்கு, சிமோன், சற்றே தோள்கொடுத்ததால்.... தான் சிறப்பு பெற்றார்... என்பது மறுக்க முடியாத உண்மை. நாமும் நம் அருகிருப்போரின், சுமைகளுக்கு தோள்கொடுத்து சகமாக்க முயல்வோமே........ குறைந்த பட்சம் சுமைகளை, அதிகமாவது ஆக்காமல் தவிர்ப்போமே!.....🙏💜

அவரைத்தவிர

"விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்" என்று குற்றம் சுமத்தப்பட்ட, அவள் மீது, அனைவரும் கல்லெறிந்தனர்.... யேசுவைத் தவிர.....

இருட்டும், வெளிச்சமும் ‌...

அன்று, ஏதோ ஒரு கிழமை..... ஒரேயொரு நாள் மட்டும்            பள்ளிக்கு விடுப்பு தந்து, வீட்டில் சுகமாய், சாய்ந்திருக்க... மனதுக்குள், மெதுவாய் ஏக்கம்.... பருவநிலை வேறு, பதமாய்....       ‌‌‌                  சார்ந்தது‌.... செய்திச் சுருக்கம், சுகமாய்                              செவிகளில்..... இன்று பள்ளிக்கு  விடுமுறை ‌... எங்கோ, இந்த பூமகளின்       மறுபுறம்  புயல் மழையாம்... ஆம்,.…..அங்கே வேதனை....          ......இங்கே இனிமை... ஆயினும் நிகழ்வு ஒன்றே... அன்று, இரவும், பகலும்... எனக்கு நன்றே புரிந்தது...

இயல்பாய்....

இயல்பாய் எனக்குள்      ஊற்றெடுத்த மூச்சு, இயங்குகிறேன் என்பதன்       அடையாளமாய் இதயத்துடிப்பு, வர்ண ஜாலங்களாய்          நினைவலைகள், மூளையின் முனைப்பில்,    முத்தாய்ப்பாய் உணர்வதிர்வுகள், மனதின் ஆழத்தில் எங்கேயோ.. மத்தாப்பாய் மகிழ்ச்சி சிதறல்கள் உதடுகளின் உள்ளார்ந்த.....      பிரவாகமாய் புன்னகை.. அனைத்தும் சுதந்திரமாய்....  அளித்தான் ஆண்டவன்,.....            வரையறையின்றி... சுவைக்கிறேன்..சுகமாய்... ஏன்???.... வாழ்வு மட்டும் விரோதமாய்.... விருப்புடன்...வாழ்வோம்..... விடுதலையாய் பரிணமிப்போம்‌..