அன்று, ஏதோ ஒரு கிழமை..... ஒரேயொரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுப்பு தந்து, வீட்டில் சுகமாய், சாய்ந்திருக்க... மனதுக்குள், மெதுவாய் ஏக்கம்.... பருவநிலை வேறு, பதமாய்.... சார்ந்தது.... செய்திச் சுருக்கம், சுகமாய் செவிகளில்..... இன்று பள்ளிக்கு விடுமுறை ... எங்கோ, இந்த பூமகளின் மறுபுறம் புயல் மழையாம்... ஆம்,.…..அங்கே வேதனை.... ......இங்கே இனிமை... ஆயினும் நிகழ்வு ஒன்றே... அன்று, இரவும், பகலும்... எனக்கு நன்றே புரிந்தது...